இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, ஓம் படத்தில் நடிகர் தனுஷை புதிய அவதாரத்தில் காட்டியதாக கூறியுள்ளார்.
’அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் தான் ஓம். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் அடுத்த அடுத்த பாடல்களும், புதிய அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. அதன்படி ராஜ்குமார் பெரியசாமி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷின் கதாபாத்திரம் குறித்து பகிர்ந்த மாஸ் தகவல்கள் வைரலாகி வருகின்றன.
அதன்படி அவர், ”அமரன் படத்தில் சிவகார்த்திகேயனை இதுவரை பார்க்காத புதிய பரிமாணத்தில் காட்டியது போல, தனுஷ் ஏற்கனவே இது போன்ற உலகத்தில் நடித்திருந்தாலும், ‘ஓம்’ திரைப்படத்தில் அவர் முற்றிலும் புதிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனுஷ் மிகவும் வியக்கவைக்கும் திறமையாளர், அவரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடைத்துவிட முடியாது. அவருடன் பணியாற்றியபோதே, மீண்டும் அவருடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. காட்சிகளை அணுகும் விதத்தில் அவர் ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டு வருகிறார். தனுஷின் அனைத்து பலங்களையும் இப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கும், காட்சியமைப்புகளுக்கும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளோம்” என்று ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

