Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக சட்டமன்ற நேரலை ஒளிபரப்புக்கு புதிய நிறுவனம் தேர்வு – 2 ஆண்டுகளுக்கு 160 நாட்கள்...

தமிழக சட்டமன்ற நேரலை ஒளிபரப்புக்கு புதிய நிறுவனம் தேர்வு – 2 ஆண்டுகளுக்கு 160 நாட்கள் நேரலை செய்ய டெண்டர்!

-

- Advertisement -

தமிழக சட்டமன்றப் பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிறுவனத்தைத் தேர்வு செய்ய செய்தி மக்கள் தொடர்புத் துறை டெண்டர் கோரியுள்ளது.தமிழக சட்டமன்ற நேரலை ஒளிபரப்புக்கு புதிய நிறுவனம் தேர்வு – 2 ஆண்டுகளுக்கு 160 நாட்கள் நேரலை செய்ய டெண்டர்!

நேரலை ஒளிபரப்பின்போது பேசும் உறுப்பினரின் பெயர், அவர் சார்ந்துள்ள தொகுதி மற்றும் பேரவையில் நடைபெறும் அலுவல் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் திரையில் இடம்பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

தவெக அரசு அமைந்த பிறகு தமிழக சட்டமன்றப் பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான நேரலை ஒளிபரப்புப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.

ஆண்டுக்கு 80 நாட்கள் – மொத்தம் 160 நாட்கள் நேரலை

டெண்டர் நிபந்தனைகளின்படி, ஆண்டுக்கு 80 நாட்கள் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் 160 நாட்கள் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும். பேரவை விதிகள் மற்றும் பேரவைத் தலைவரின் உத்தரவுகளுக்கு உட்பட்டு ஒளிபரப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவைத் தலைவர், பேசும் உறுப்பினர் மட்டுமே காட்சியில் இடம்பெற வேண்டும்

நேரலை ஒளிபரப்பின்போது பேரவைத் தலைவர் மற்றும் பேசுவதற்கு அழைக்கப்பட்ட உறுப்பினர் ஆகியோரையே காட்சிப்படுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர் மாடங்கள், பேசாத உறுப்பினர்கள் மற்றும் பேரவையில் ஏற்படும் அமளி தொடர்பான காட்சிகள் ஆகியவை, பேரவை விதிமுறைகள் அனுமதிக்கும் வகையில் மட்டுமே ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நேரலை ஒளிபரப்பில் எவ்விதமான வர்ணனையும் இடம்பெறக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேசும் உறுப்பினரின் பெயர், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மற்றும் அப்போது நடைபெறும் பேரவை அலுவல் குறித்த விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திரையில் தெளிவாகக் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவில் திருத்தம் செய்வதற்கும் கட்டுப்பாடுகள்

நேரலை ஒளிபரப்புக்குப் பின்னர் பதிவுசெய்யப்பட்ட காட்சிகளில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பேரவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு உத்தரவிடப்பட்ட பகுதிகள், சபை ஒத்திவைக்கப்படும் இடைவேளைகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் தொடர்பான பகுதிகளை மட்டுமே பதிவிலிருந்து திருத்தி நீக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சட்டமன்ற அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக அறிவுறுத்தும் பிற திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு திருத்தமும், அதற்குரிய நேரக் குறியீடுகளுடன் (Time Codes) திருத்தப் பதிவேட்டில் (Edit Log) முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அசல் ஒளிப்பதிவைக் காப்பகத்தில் பாதுகாக்க வேண்டும்

திருத்தங்கள் செய்யப்பட்ட பதிவுகளுடன், முழுமையான திருத்தப்படாத அசல் ஒளிப்பதிவையும் காப்பகத்தில் பாதுகாத்து வைக்க வேண்டும் என டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் சட்டமன்ற நிகழ்வுகளின் அசல் பதிவுகள் எவ்வித மாற்றமும் இன்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டமன்ற நேரலை ஒளிபரப்புக்கான புதிய நிறுவனத்தைத் தேர்வு செய்யும் இந்த டெண்டரில், ஒளிப்பதிவு, ஒளிபரப்பு, காட்சித் தேர்வு, இருமொழித் தகவல் வெளியீடு மற்றும் பதிவுகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்க முதலமைச்சர் விஜய் கோரிக்கை – தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வரவேற்பு!

MUST READ