தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை தற்போது வெளியிட முடியாததற்கு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளே காரணம் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு, வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான நடைமுறைகளை முடித்த பின்னரே தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியும் என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகே தேர்தல்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற வேண்டியுள்ளதால் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதில் சிக்கல் இருப்பதாகத் தெரிவித்தனர்.
மேலும், கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்த பிறகு வார்டு மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றும், அதனைத் தொடர்ந்து இடஒதுக்கீடு தொடர்பான நடைமுறைகளும் நிறைவு செய்யப்பட வேண்டும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
அரசு, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.
3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மூன்று வாரங்களுக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழக அரசின் விளக்கம் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் பதிலைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் விஜய்யுடன் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சந்திப்பு – சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!
