Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாவம் – ஜோதிமணி கருத்துக்கு மாணிக்கம் தாகூர் பதில்!

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாவம் – ஜோதிமணி கருத்துக்கு மாணிக்கம் தாகூர் பதில்!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதான சர்ச்சை தொடர்ந்து வருகிறது.கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாவம் – ஜோதிமணி கருத்துக்கு மாணிக்கம் தாகூர் பதில்!

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்த கருத்து குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார்.

we-r-hiring

வாட்ஸ்அப்பில் பரவிய தகவலை வைத்து கருத்து தெரிவித்த ஜோதிமணி?

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக அருள் விக்னேஷ் மீது தகவல்கள் பரவின. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.

“அருள் விக்னேஷ் பாவம்” – மாணிக்கம் தாகூர்

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், வாட்ஸ்அப்பில் பரவிய தகவலை வைத்து ஜோதிமணி உடனடியாக எதிர்வினையாற்றியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகக் கூறினார். மேலும், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாவம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

குற்றச்சாட்டை மறுத்த எம்.எல்.ஏ.

இதற்கிடையே, தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்படுவதாகவும், தன்னை இழிவுபடுத்தும் நோக்கில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பெண் மாவட்ட ஆட்சியர் தொடர்பான இந்தப் புகார் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மாணிக்கம் தாகூரின் பேட்டி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ. மீது புகார் – உண்மையெனில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜோதிமணி எம்.பி. வலியுறுத்தல்!

MUST READ