spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஎல்.ஐ.சி.யின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 5 மடங்கு அதிகரிப்பு!

எல்.ஐ.சி.யின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 5 மடங்கு அதிகரிப்பு!

-

- Advertisement -

 

எல்.ஐ.சி.யின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 5 மடங்கு அதிகரிப்பு!
Photo: LIC

மத்திய அரசின் பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் நிகர லாபம், நான்காவது காலாண்டில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

we-r-hiring

பெண் போலீசுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்- இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை

கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதங்கள் வரையிலான காலாண்டில் 13,191 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளதாக எல்.ஐ.சி. தெரிவித்துள்ளது. இதுவே முந்தை நிதியாண்டில், இதே காலாண்டில் எல்.ஐ.சி. 2,409 கோடி ரூபாய் மட்டுமே லாபம் ஈட்டியிருந்தது. கடந்த 2021 – 2022 ஆம் நிதியாண்டில் 4,125 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருந்த எல்.ஐ.சி., அடுத்த 2022- 2023 ஆம் நிதியாண்டில் லாபம் பல மடங்கு அதிகரித்து 35,997 கோடி ரூபாய் ஆனது.

நடுக்கடலில் நின்ற மர்ம படகு – சுற்றி வளைத்த போலீசார்

ஹிண்டன்பர்க் சர்ச்சையில் சிக்கிய அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்திருந்ததால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என சர்ச்சை எழுந்த நிலையில், அந்நிறுவனம் பல மடங்கு லாபத்தைப் பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

MUST READ