Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் 2027: இலவச வேட்டி, சேலைகளை ரேஷன் கடைகளுக்குக் கொண்டு செல்ல ரூ.1.8 கோடியில் டெண்டர்!

பொங்கல் 2027: இலவச வேட்டி, சேலைகளை ரேஷன் கடைகளுக்குக் கொண்டு செல்ல ரூ.1.8 கோடியில் டெண்டர்!

-

- Advertisement -

தமிழகத்தில் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்குவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, வேட்டி மற்றும் சேலைகளை நியாய விலைக் கடைகளுக்குக் கொண்டு செல்வதற்காக ரூ.1.8 கோடி மதிப்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

we-r-hiring

ரூ.1.8 கோடி மதிப்பில் டெண்டர்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுவது வழக்கம். இதற்காகத் தயாரிக்கப்படும் வேட்டி, சேலைகளை மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, வேட்டி, சேலைகளை உரிய நியாய விலைக் கடைகளுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி கட்டாயம்

இந்தப் போக்குவரத்துப் பணியில் ஈடுபடும் வாகனங்களில் ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேட்டி, சேலைகள் ஏற்றிச் செல்லப்படும் வாகனங்களின் பயணத்தைத் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

மேலும், ஒதுக்கப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு வேட்டி, சேலைகள் உரிய முறையில் சென்றடைகிறதா என்பதையும் ஜிபிஎஸ் கண்காணிப்பு மூலம் உறுதிப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகப் பொருட்களைத் தடையின்றி நியாய விலைக் கடைகளுக்குக் கொண்டு சேர்ப்பதுடன், விநியோகப் பணியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதும் இந்த ஏற்பாட்டின் நோக்கமாகக் கருதப்படுகிறது.

கொலை, கொள்ளை குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – சிறு வணிகர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் தேவை! பொன்னேரியில் விக்ரமராஜா பேட்டி

MUST READ