இந்தியத் திரையுலக வரலாற்றில் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனையாகக் கருதப்படும் ரூ.1000 கோடி என்பது உலகளாவிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த சாதனையை பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் டாப் நடிகர்களின் படங்கள் முறியடித்து வருகின்றன. அந்த வகையில் மிகக் குறுகிய காலத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டிய திரைப்படங்களின் முழுமையான விவரங்களைப் பற்றி பார்ப்போம்.
இந்த வரிசையில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் வெளியான வெறும் 6 நாட்களிலேயே ரூ.1000 கோடி வசூலைக் கடந்து, இந்திய சினிமாவிலேயே அதிவேகமாக வசூலை வாரி குவித்து நம்பர் 1 இடத்தைப் பிடித்து மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர் 2’ திரைப்படம் 7 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
அடுத்தபடியாக ரன்பீர் கபூர் , சாய் பல்லவி, யாஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியான ராமாயணா பாகம் 1′ திரைப்படம் வெளியான 8 நாட்களில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மூன்றாவது இடத்திலும் உள்ளது.
மேலும், பிரபாஸின் புகழ்பெற்ற ‘பாகுபலி 2’ பத்து நாட்களிலும், ‘கல்கி 2898 AD திரைப்படம் 15 நாட்களிலும், யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ மற்றும் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ ஆகிய திரைப்படங்கள் 16 நாட்களிலும் இந்த மைல்கல்லை எட்டியது.
இது தவிர 18 நாட்களில் ஷாருக்கானின் ‘ஜவான்’ , 21 நாட்களில் ‘துரந்தர்’ மற்றும் 27 நாட்களில் ‘பதான்’ ஆகிய திரைப்படங்களும் இந்த அதிவேகப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எல்லையை உலகளவில் உயர்த்திக் காட்டியுள்ளன.

