சூர்யா 48 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, கருப்பு, விஷ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, சமீபத்தில் தீபாவளி வெளியீட்டாகக் களமிறங்கிய ‘சீன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும்
‘சீன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தனது அடுத்த படமான ‘சூர்யா 48’ திரைப்படத்தின் பணிகளில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறார். மாபெரும் வெற்றி படமாக அமைந்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் டி.ஜே. ஞானவேல் மற்றும் சூர்யா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜப்பானில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து கயடு லோஹர், யோகி பாபு, பிரகாஷ்ராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். சாய் அபியங்கர் இதற்கு இசை அமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யா ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று ஏற்கனவே சினிமா வட்டாரங்களில் தகவல் பரவியிருந்த நிலையில், தற்போது இப்படம் ஒரு விறுவிறுப்பான கிரிமினல் வழக்கு பின்னணியைக் கொண்ட ஹை-ஆக்டேன் கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது.
