Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனின் 'சேயோன்'.... கேமியோ என்ட்ரியால் எகிறும் எதிர்பார்ப்பு!

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’…. கேமியோ என்ட்ரியால் எகிறும் எதிர்பார்ப்பு!

-

- Advertisement -

சிவகார்த்திகேயனின் சேயோன் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயனின் 'சேயோன்'.... கேமியோ என்ட்ரியால் எகிறும் எதிர்பார்ப்பு!

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் சின்னத்திரையில் பணியாற்றி வந்த சிவகார்த்திகேயன், படிப்படியாகத் தனது கடின உழைப்பால் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்து முன்னணி நாயகனாக உயர்ந்துள்ளார். அதிலும் குறிப்பாக, ‘அமரன்’ திரைப்படம் அவருக்கு இந்திய அளவில் மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. ​இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் தனது அடுத்தடுத்த படங்களையும் கதாபாத்திரங்களையும் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது முருகப்பெருமானை மையமாக வைத்து உருவாகும் ‘சேயோன்’ படத்தில் அவர் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 'சேயோன்'....  கேமியோ என்ட்ரியால் எகிறும் எதிர்பார்ப்பு!சிவகுமார் முருகேசன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘சேயோன்’ திரைப்படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாகவும் அவருடைய காட்சி கிளைமாக்ஸில் இடம்பெற இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ​இந்த படத்தில் கமல்ஹாசனின் காட்சி கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனின் 'சேயோன்'....  கேமியோ என்ட்ரியால் எகிறும் எதிர்பார்ப்பு!ஏற்கனவே சிவகார்த்திகேயன் இந்த படத்தில் விருமாண்டி கதாபாத்திரத்தில் நடிப்பதால் கமல்ஹாசன் இந்த படத்தில் விருமாண்டி கெட்டப்பில் வருவார் என ஒரு பக்கம் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் கமல்ஹாசன் முருகப்பெருமான் வேடத்தில் நடிக்கப் போகிறாரா? என்பது போன்ற விவாதங்களும் சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.

மேலும் இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்கிறார். பாக்யஸ்ரீ போர்ஸ், சீமான் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ