தனுஷின் ஓ.ம் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷின் 55-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஓ.ம்’ (O.M) திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. படத்தின் புரொமோஷன் பணிகளும், மற்ற பின்னணி வேலைகளும் தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. மேலும், இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்துள்ள மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோருக்கும் மிக முக்கியமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வரும் நிலையில், படத்தின் இசை குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தனுஷின் கடந்த சில திரைப்படங்களில் கதைக்களம் மற்றும் ஜானர் காரணமாகக் கமர்ஷியல் சார்ட்பஸ்டர் பாடல்கள் சற்று குறைவாகவே இருந்தன. ஆனால், ‘ஓம்’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையில் இதுவரை வெளியான அனைத்துப் பாடல்களுமே மிகப்பெரிய சார்ட்பஸ்டர் ஹிட் அடித்து, படத்தின் முக்கிய புரொமோஷன் அம்சமாக மாறியுள்ளன.
இதுமட்டுமின்றி, இப்படத்தில் இன்னும் வெளியிடப்படாத சில பாடல்களும், மாண்டேஜ் பாடல்களும் இருப்பதாகவும், அவை நேரடியாகத் திரையரங்குகளில் படத்தோடு சேர்த்து வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.
