Homeசெய்திகள்இந்தியாகுடியுரிமை பெறும் முன்பே வாக்காளர் பட்டியலில் சோனியா பெயர்? – டெல்லி போலீஸிடம் அறிக்கை கேட்ட...

குடியுரிமை பெறும் முன்பே வாக்காளர் பட்டியலில் சோனியா பெயர்? – டெல்லி போலீஸிடம் அறிக்கை கேட்ட நீதிமன்றம்

-

- Advertisement -

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பெயர், அவர் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக, டெல்லி ஐ.பி. எஸ்டேட் காவல் நிலைய போலீஸாரிடம் நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்ய ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் விகாஸ் திரிபாதி என்பவர் தாக்கல் செய்த புகார் மனுவில், 1980-ஆம் ஆண்டு புதுடெல்லி தொகுதி வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றிருந்ததாகவும், அவர் 1983-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதிதான் இந்தியக் குடியுரிமை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடத்த உத்தரவிட மறுத்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை, செப்டம்பர் 21-ஆம் தேதி செஷன்ஸ் நீதிமன்றம் ரத்து செய்து, வழக்கை மீண்டும் பரிசீலிக்க அனுப்பியது.

இதையடுத்து, கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் வினோத் ஜோஷி தலைமையிலான நீதிமன்றம், ஐ.பி. எஸ்டேட் காவல் நிலைய ஆய்வாளரிடம் அறிக்கை கோரியுள்ளது.

புகார் காவல் நிலையத்தில் பெறப்பட்டதா, அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, விசாரணையில் அடிப்படை குற்றம் ஏதேனும் தெரியவந்துள்ளதா, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், 1980 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளுக்கான வாக்காளர் பட்டியல்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை கூடுதல் ஆவணங்களாகத் தாக்கல் செய்யவும் புகார்தாரருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. புகார் தொடர்பான அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஜெயலலிதாவுடன் அரசியல் மோதல்: சோனியா காந்தியின் சுயசரிதை நூலில் இடம்பெற்ற சுவாரசியத் தகவல்கள் – வரலாற்று ஆய்வாளர் கண்ணன் சிறப்புப் பேட்டி!

MUST READ