Homeசெய்திகள்உலகம்"அல்ஜீரியா முதல் இந்தியா வரை, சூடான் முதல் இந்தோனேசியா வரை": கருங்கடல் உணவு ஏற்றுமதிக்கு அச்சுறுத்தல்...

“அல்ஜீரியா முதல் இந்தியா வரை, சூடான் முதல் இந்தோனேசியா வரை”: கருங்கடல் உணவு ஏற்றுமதிக்கு அச்சுறுத்தல் – ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

-

- Advertisement -

ரஷ்யாவுடனான போர் காரணமாக கருங்கடல் வழியாக மேற்கொள்ளப்படும் வேளாண் பொருட்கள் மற்றும் உணவு ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார். இதன் தாக்கம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவைத் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளின் உணவுப் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான கோடி மக்களின் உணவுத் தேவைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்

உக்ரைனில் நடைபெற்ற ‘Food from Ukraine’ உச்சி மாநாட்டில் பேசிய ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுடனான போரால் கருங்கடல் பிராந்தியத்தில் இருந்து வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வது மிகவும் சிக்கலாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “ரஷ்யாவின் போர் காரணமாக கருங்கடல் பிராந்தியத்தில் இருந்து வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வது மிகவும் கடினமாகியுள்ளது. அல்ஜீரியா முதல் இந்தியா வரை, சூடான் முதல் இந்தோனேசியா வரை பல நாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான கோடி மக்களுக்கான உணவுத் தேவையில் இந்த ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று தெரிவித்தார்.

தானியங்கள், மாவு, சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி பாதிப்பு

உக்ரைன் விவசாயிகள் மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் தானியங்கள், மாவு, சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இந்த ஏற்றுமதியில் ஏற்படும் தடைகள் காரணமாக உணவுப் பொருட்களின் விநியோகம் குறைந்து, பல நாடுகளில் பற்றாக்குறையும் விலை உயர்வும் ஏற்படக்கூடும் என்று ஜெலன்ஸ்கி எச்சரித்தார்.

உலக நாடுகள் உக்ரைனின் வேளாண் பொருட்களைச் சார்ந்திருப்பதால், ஏற்றுமதி வழித்தடங்களைப் பாதுகாப்பது சர்வதேச உணவுப் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து மாற்று வழித்தடங்கள்

கருங்கடல் வழியாக ஏற்றுமதி செய்வதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடிப்பதால், ஐரோப்பிய அண்டை நாடுகளுடன் இணைந்து ‘Solidarity Lanes’ எனப்படும் மாற்று ஏற்றுமதி வழித்தடங்களைச் செயல்பாட்டில் வைத்திருக்க உக்ரைன் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மேலும், அரபு நாடுகள், துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் இணைந்து உக்ரைன் உணவுப் பொருட்களை சர்வதேச சந்தைகளுக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

‘Food from Ukraine’ திட்டம்

போர் தொடங்கிய முதல் ஆண்டிலேயே உக்ரைன் அரசு ‘Food from Ukraine’ என்ற உணவுப் பொருள் உதவித் திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏமன், எத்தியோப்பியா, சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு லட்சக்கணக்கான டன் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ஏற்கெனவே கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், உணவு ஏற்றுமதி வழித்தடங்களைப் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை ஜெலன்ஸ்கியின் எச்சரிக்கை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

“2026-ல் போர்க்களத்தில் ரஷ்யா தோல்வி ” – ஜெலன்ஸ்கி

MUST READ