spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்புது மாப்பிள்ளையின் வெறிச்செயல்! பெற்றோரின் எதிர்ப்பை மீறிய கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட கதி

புது மாப்பிள்ளையின் வெறிச்செயல்! பெற்றோரின் எதிர்ப்பை மீறிய கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட கதி

-

- Advertisement -

 

புது மாப்பிள்ளையின் வெறிச்செயல்! பெற்றோரின் எதிர்ப்பை மீறிய கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட கதி
புதுப்பெண் கொலை

பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட அந்த கல்லூரி மாணவிக்கு அந்த கதி ஏற்பட்டு இருக்கிறது. திருமணம் நடந்த 21வது நாளிலேயே துப்பட்டாவால் காதல் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார் வாலிபர். கோவை மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

we-r-hiring

கோவையில் மத்துவராயபுரத்தைச் சேர்ந்தவர்கள் ரமணி-சஞ்சய் . 20 வயதான இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்திருக்கிறார்கள். காதலுக்கு பெற்றோரின் எதிர்ப்பு கடுமையாக இருந்திருக்கிறது. இதனால் கடந்த ஆறாம் தேதி அன்று வேளாங்கன்னிக்கு சென்று அப்பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் வைத்து ரமணியை திருமணம் செய்து இருக்கிறார் சஞ்சய்.

இதன் பின்னர் காவல் நிலையத்தில் சமரச பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அந்த பேச்சு வார்த்தையில் சஞ்சய் வீட்டினர் உடன்பட்டு ரமணியை அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.

புது மாப்பிள்ளையின் வெறிச்செயல்! பெற்றோரின் எதிர்ப்பை மீறிய கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட கதி
சஞ்சய்

வீட்டிற்குச் சென்ற பின்னர் தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த மாணவியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்திருக்கிறார் சஞ்சய் . இதை ரமணி பார்த்துவிட்டு எதற்காக அவளுடன் அடிக்கடி பேசுகிறாய் என்று கேட்க, இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. நேற்று முன்தினமும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த சஞ்சய் ரமணியை சரமாரியாக அடித்திருக்கிறார் .

அத்தோடு விடாமல் ரமணி அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவை இழுத்து அவரின் கழுத்தில் போட்டு நெரித்திருக்கிறார். இதில் அப்போதே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் ரமணி. இந்த கொலையை மறைப்பதற்காக பெற்றோரின் உதவியை கேட்டிருக்கிறார்.

அனைவரும் சேர்ந்து ரமணியின் உடலில் இருந்த ரத்த காயங்களை தண்ணீர் விட்டு கழுவி இருக்கிறார்கள் . பின்னர் உடைமாற்றிவிட்டு அவர் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடி இருக்கிறார்கள். அதன் பின்னர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ரமணியின் உடலை போலீசார் எடுத்துச் சென்று இருக்கிறார்கள் .

ஆனால் ரமணியின் பெற்றோர் தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவிக்க , அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த போது தான் சஞ்சய் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார் . இதன் பின்னர் சஞ்சய் அவரது தாய் ,தந்தை மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட அந்த பெண்ணை திருமணம் ஆன 21 வது நாளிலேயே கழுத்தை நெரித்து கொலை செய்த அந்த புது மாப்பிள்ளை செயல் மத்துவராயபுரம் பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ