Homeசெய்திகள்க்ரைம்அப்பாதான் அம்மாவைக் கொன்னாரு’.. 5 வயது சிறுவனின் வாக்குமூலத்தால் அம்பலமான கொடூரம்: 8 மாத கர்ப்பிணி...

அப்பாதான் அம்மாவைக் கொன்னாரு’.. 5 வயது சிறுவனின் வாக்குமூலத்தால் அம்பலமான கொடூரம்: 8 மாத கர்ப்பிணி மனைவி படுகொலை!

-

- Advertisement -

உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக எட்டு மாத கர்ப்பிணியான மனைவியைக் படுகொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவனை, அவரது 5 வயது மகனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.அப்பாதான் அம்மாவைக் கொன்னாரு’.. 5 வயது சிறுவனின் வாக்குமூலத்தால் அம்பலமான கொடூரம்: 8 மாத கர்ப்பிணி மனைவி படுகொலை!

குடும்பத் தகராறில் நாடகமாடிய கணவன் கைது — உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹனீஃப் என்பவருக்கும், அவரது மனைவி மனிஷா என்பவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினைகள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மனிஷா 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், திடீரென அவர் வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார். தன் மனைவி இயற்கை மரணம் அடைந்துவிட்டதாகக் கூறி கணவர் ஹனீஃப் நாடகமாட முயன்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மனிஷாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்ததுடன் விசாரணையைத் தொடங்கினர்.

we-r-hiring

சிறுவனின் வாக்குமூலமும் அதிரடி திருப்பமும்
விசாரணையின் போது, ஹனீஃபின் 5 வயது மகன் அளித்த வாக்குமூலம் இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

சிறுவன் காவல்துறையிடம் கூறியதாவது, “அப்பாதான் அம்மாவைக் கொன்றார். அவர் அம்மாவைத் தாக்கி கொலை செய்ததை நான் என் சொந்தக் கண்களால் நேரில் பார்த்தேன்.” குழந்தை கூறிய தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக ஹனீஃப்பைத் தங்களது பாணியில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட கணவன்
சிறுவனின் வாக்குமூலத்தையும், போலிசாரின் கெடுபிடி விசாரணையையும் எதிர்கொள்ள முடியாமல், ஹனீஃப் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்து 8 மாத கர்ப்பிணியான மனைவி மனிஷாவைப் படுகொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஹனீஃப் மீது கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயைக் கொன்ற தந்தையை, 5 வயது மகனே அடையாளம் காட்டி போலீசில் சிக்க வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேரில் பயங்கரம்: வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – அரிவாள் வெட்டில் ஒருவர் காயம்!

MUST READ