Homeசெய்திகள்க்ரைம்மருமகனை சயனைடு வைத்துக் கொன்று குடும்பத்தையே மிரட்டிய கொடூரன்: காக்கிநாடா வழக்கில் பிடிபட்ட அதிர்ச்சி உண்மை!

மருமகனை சயனைடு வைத்துக் கொன்று குடும்பத்தையே மிரட்டிய கொடூரன்: காக்கிநாடா வழக்கில் பிடிபட்ட அதிர்ச்சி உண்மை!

-

- Advertisement -

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பஞ்சாயத்து ராஜ் உதவிப் பொறியாளர் குடும்பத்தினர் கோதாவரி ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதிய திருப்பமாக, ரூ. 25 கோடி சொத்தைக் கைப்பற்ற இளநீரில் சயனைடு கொடுத்துக் கொலை செய்ததை கைதான துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சாதீக் ஒப்புக்கொண்டு அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.மருமகனை சயனைடு வைத்துக் கொன்று குடும்பத்தையே மிரட்டிய கொடூரன்: காக்கிநாடா வழக்கில் பிடிபட்ட அதிர்ச்சி உண்மை!

கோதாவரியில் விபரீதம் – சிறுவன் மட்டும் தப்பினார்
காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரத்தில் பஞ்சாயத்து ராஜ் பொறியாளராகப் பணிபுரிந்து வந்த நூக்கராஜு, தனது மனைவி மீனா, மகள் சௌஜன்யா மற்றும் 10 வயது பேரன் கார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி ராஜமுந்திரி கோதாவரி ஆற்றுப் பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றார். இதில் நீச்சல் தெரிந்த பேரன் கார்த்திகேயன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். நூக்கராஜு, மனைவி மற்றும் மகளின் உடல்கள் இரண்டு நாட்களுக்குப் பின்னரே மீட்கப்பட்டன.

we-r-hiring

மருமகனின் திடீர் மரணமும் தற்கொலை கடிதமும்
போலீசார் நடத்திய விசாரணையில், நூக்கராஜுவின் மகன் 4 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்ததால், கணவரை இழந்த மகள் சௌஜன்யா குடும்பத்துடன் வசித்து வந்தது தெரியவந்தது. சௌஜன்யாவின் பேரன் துப்பாக்கி சுடும் பயிற்சிக்குச் சென்றபோது, அங்கிருந்த பயிற்சியாளர் சாதீக் சௌஜன்யாவுக்குத் தொல்லை கொடுத்து மறுமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். இதனிடையே, சௌஜன்யாவின் கணவர் ஜெகதீஸ்வர் ரெட்டி கடந்த ஜூலை 2-ஆம் தேதி திடீரென இறந்தார். தொடர்ந்து சாதீக்கின் அச்சுறுத்தலால் மன உளைச்சலுக்கு ஆளான நூக்கராஜு குடும்பத்தினர் தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆற்றில் குதித்துள்ளனர். கடிதத்தின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த சாதீக்கை போலீசார் கைது செய்தனர்.மருமகனை சயனைடு வைத்துக் கொன்று குடும்பத்தையே மிரட்டிய கொடூரன்: காக்கிநாடா வழக்கில் பிடிபட்ட அதிர்ச்சி உண்மை!

இளநீரில் சயனைடு: விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை
போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட சாதீக், தொடக்கத்தில் குற்றத்தை மறுத்தாலும் தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் சயனைடு விற்றவர்களின் சாட்சியங்களை வைத்துப் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக்கொண்டார்:

  • மருத்துவமனை விஷ முயற்சி: ஜெகதீஸ்வர் ரெட்டி காக்கிநாடா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது 3-4 முறை விஷம் கொடுத்துக் கொல்ல முயன்றுள்ளார். ஆனால் அவர் குணமடைந்து ஹைதராபாத்தில் இருந்து வீடு திரும்பினார்.

  • சயனைடு இளநீர்: இதன் பின்னர் சயனைடு வாங்கி இளநீரில் கலந்து கொடுத்துள்ளார். அதனை அருந்திய மறுநாளே ஜெகதீஸ்வர் ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

மருமகனை சயனைடு வைத்துக் கொன்று குடும்பத்தையே மிரட்டிய கொடூரன்: காக்கிநாடா வழக்கில் பிடிபட்ட அதிர்ச்சி உண்மை!

ரூ. 25 கோடி சொத்துக்காகத் தீட்டிய சதி
ஜெகதீஸ்வர் ரெட்டியைக் கொன்றுவிட்டு சௌஜன்யாவைத் திருமணம் செய்தால், அக்குடும்பத்தின் ரூ. 25 கோடி மதிப்புள்ள சொத்து தனக்குக் கிடைக்கும் எனச் சாதீக் திட்டமிட்டுள்ளார். ஆனால், நூக்கராஜு திருமணத்திற்குச் சம்மதிக்காமல் சொத்துக்களைப் பேரனின் பெயருக்கு எழுத முயன்றதால் ஆத்திரமடைந்து மிரட்டியுள்ளார். “அவர்களை மிரட்ட மட்டுமே செய்தேன், ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை” எனச் சாதீக் தெரிவித்துள்ளார். சாதீக் பயன்படுத்திய சயனைடு மாதிரிகளைக் கைப்பற்றியுள்ள சர்ப்பவரம் காவல்துறையினர், வழக்கின் பிற ஆதாரங்களை திரட்டி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாமானியர்களின் பையை குறிவைக்கும் மோடி அரசு! UPI பரிவர்த்தனை மீது மறைமுகக் கட்டணம் திணிப்பு – ராகுல் காந்தி, கார்கே ஆவேசம்!

MUST READ