spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉதயநிதி அப்படி சொன்னதுல எனக்கு விருப்பமில்லை... நெகிழ்ச்சியா‌ பேசிய விஜய் ஆண்டனி!

உதயநிதி அப்படி சொன்னதுல எனக்கு விருப்பமில்லை… நெகிழ்ச்சியா‌ பேசிய விஜய் ஆண்டனி!

-

- Advertisement -

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாமன்னன் படக்குழுவினருடன் கமல், வெற்றிமாறன், விஜய் ஆண்டனி, சிவகார்த்திகேயன், பா.ரஞ்சித், விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

we-r-hiring

இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் “மாமன்னன் தான் என் கடைசி படம். அமைச்சரான பின்பு படங்களில் நடிப்பது சரியாக இருக்காது” என்று கூறியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து படக்குழுவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பேசினர்.

மேலும் அந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி ” இயக்குனர் மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்து விட்டார். உதயநிதி ஸ்டாலின் பெரிய இடத்தில் பிறந்திருந்தாலும் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். ‘மாமன்னன் தான் என் கடைசி படம்’ என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதில் எனக்கு விருப்பமில்லை. இருந்த போதிலும் அரசியல் காரணங்களுக்காக அவரை வாழ்த்தி வழி அனுப்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் வடிவேலு இந்த படத்தில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனவே ‘மாமன்னன்’ திரைப்படம் இந்த வருடத்தின் முக்கியமான படமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

MUST READ