பிரபல நடிகர் கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் கடந்த 2010 ‘பையா’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை பெரிதும் கை கொடுத்தது. இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அந்த சமயத்தில் சூப்பர் ஹிட்டானது.
இயக்குனர் லிங்குசாமி பையா படத்தை தொடர்ந்து அஞ்சான், சண்டக்கோழி 2,தி வாரியர் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார்.
இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
எனவே பையா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருக்கிறார்.

தற்போது கார்த்தி ‘ஜப்பான்’ திரைப்படத்தில் பிஸியாக இருப்பதால் ஆர்யா இந்த படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் கூறப்பட்டது. மீண்டும் கார்த்தியுடன் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஆர்யாவே தற்போது பையா 2 படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜா இசையிலும் உருவாக உள்ளது.
