
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், சொந்த ஊரில் இருந்து ஏராளமானோர் சென்னை திரும்புவதால் செங்கல்பட்டு அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுனைனாவின் ரெஜினா படத்தின் ரிலீஸ் அப்டேட்!
பள்ளிக் கூடங்களின் கோடை விடுமுறைக் காரணமாக, சென்னையில் வசிப்போர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். கோடை விடுமுறை நிறைவடைந்து இன்று (ஜூன் 12) மீண்டும் பள்ளிக் கூடங்கள் திறப்பதால், சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தவர்கள், தனியார் கார்களிலும், பேருந்துகளிலும் சென்னை திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக, செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் காணப்பட்டது. பேருந்துகளிலும் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
விஜய் சேதுபதியின் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ படத்தில் இணைந்த கபாலி பட நடிகை!
தமிழகத்தில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்த நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், 6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஜூன் 12) முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.


