Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதியின் 'மெர்ரி கிறிஸ்மஸ்' படத்தில் இணைந்த கபாலி பட நடிகை!

விஜய் சேதுபதியின் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ படத்தில் இணைந்த கபாலி பட நடிகை!

-

விஜய் சேதுபதி படத்தில் நடிகை ராதிகா ஆப்தே இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி சமீபத்தில் நடித்த வெளியான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

இதை தொடர்ந்து விஜய் சேதுபதி இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்காக மலேசியா சென்றுள்ளார்.

இதற்கிடையில் ஹிந்தியில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் கத்ரீனா கைஃப் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இது ஒரு பண்டிகை திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை சஞ்சய் ரௌத்ரே மற்றும் ரமேஷ் தௌராணி இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த படம் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் இந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கூடுதல் தகவலாக இந்த படத்தில் தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த ராதிகா ஆப்தே கௌரவ வேடத்தில்  நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ