தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் தனுசுடன் பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார், ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படம் சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷ் இசையிலும் உருவாகி வருகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கூடுதல் தகவலாக, கேப்டன் மில்லர் திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாக இருக்கிறது என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.
அதாவது இது ஒரு பீரீயாடிக் படமாக தயாராகி வருவதால் இதன் முதல் பாகம் 1940 காலங்களில் நடப்பது போலவும், இரண்டாம் பாகம் 1990களில் நடப்பது போலவும், மூன்றாம் பாகம் தற்போது நடப்பது போலவும் உருவாக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்தப் படம் தொடர்பான மற்ற தகவல்கள் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.