spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாலியோ பட பாடல் விவகாரம் - நடிகர் விஜய்க்கு நோட்டீஸ்

லியோ பட பாடல் விவகாரம் – நடிகர் விஜய்க்கு நோட்டீஸ்

-

- Advertisement -

லியோ பட பாடல் விவகாரம் – நடிகர் விஜய்க்கு நோட்டீஸ்

நா ரெடி பாடல் போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Image

லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜயுடன் சஞ்சய்தத், திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் வாசுதேவ் மேனன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. விஜய்யின் பிறந்த நாளான கடந்த 22 ஆம் தேதி இப்படத்தின் முதல் சிங்கிளான நா ரெடி தான் வரவா என்ற பாடலை படக்குழு வெளியிட்டது.

we-r-hiring
விஜய்யின் உண்மை முகம் அதுவா? இதுவா?
லியோ

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். அதில், போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையலும் லியோ படத்தில் வரும் ‘நா ரெடி தான் வரவா’ பாடல் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நா ரெடி பாடல் போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விஜயின் பனையூர் முகவரி, சாலிகிராமம் முகவரிக்கும் ஆர்.டி.ஐ.செல்வம் சார்பில் Show Cause நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போலீசாரிடம் அளித்த புகாரால் கொலை மிரட்டல் வருவதாகவும் போலீசாரிடம் மீண்டும் புகார் அளிக்க உள்ளதாகவும் ஆர்.டி.ஐ.செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

MUST READ