மின்னல் தாக்கி இளைஞர் பலி! குடும்பத்தினர் கண்முன்னே நடந்த சோகம்
புதுச்சேரி அருகே மின்னல் தாக்கி பெங்களூர் வாலிபர் பலி ஆனார், குடும்பத்தினர் கண்முன்னே நடந்த சோக சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் வெப்பச் சலனத்தின் காரணமாக அவ்வப்போது லேசான இடியுடன் கூடிய குறைந்த அளவில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலம், பெங்களூர், பரப்பன அக்ரஹாரம், ஹரிமஹாத்மா கோயில் பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக்.(30) சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார், இவருடன் பிரவீன், பிரசாந்த் உள்பட 9 பேர் சுற்றுலா பயனிகளாக புதுச்சேரிக்கு வந்தனர். தமிழகப் பகுதியான ஆரோவில் பகுதியில் தங்கியிருந்து சுற்றுலாத் தளங்களை பார்த்து வந்தனர்.

தவளக்குப்பத்தை அடுத்த சுற்றுலா தளமான புதுக்குப்பம் கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டு அங்கு இரண்டு காரில் சென்றனர். அனைவரும் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்க அபிஷேக் மட்டும் தனியாக கடற்கரை ஓரமாக நடைபயிற்சியில் இருந்தார், அப்போது திடீரென பலத்த இடி-மின்னலுடன் லேசான மழை பெய்தது, அதனைத் தொடர்ந்து மின்னலின் தாக்கம் அதிகரித்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் தாக்கி அபிஷேக் கீழே சுருண்டு விழுந்தார்.

அதனைக் கண்டு அதிர்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சையளித்தனர். புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரித்துரை செய்தனர். அதனைத் தொடர்ந்து சுமார் 20 நிமிடத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர், அங்கு அபிஷேக் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தவளக்குப்பம் காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். உறவினர்களின் கண்முன்னே மின்னல் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


