Homeசெய்திகள்ஹைப்பர் லிங்க் கிரைம் த்ரில்லரில் இணைந்த விதார்த், சந்தோஷ் பிரதாப் கூட்டணி!

ஹைப்பர் லிங்க் கிரைம் த்ரில்லரில் இணைந்த விதார்த், சந்தோஷ் பிரதாப் கூட்டணி!

-

- Advertisement -

நடிகர் விதார்த் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விதார்த் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். சமீப காலமாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் திரில்லர் படங்களாகவே இருக்கின்றன.
அந்த வகையில் விதார்த் நடிகர் சரத்குமார் உடன் இணைந்து சமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் திருமலை பாலுசாமி இயக்கும் இந்த படம் சஸ்பென்ஸ் திரில்லர் படமாகும். இந்த படத்தை எம் 360 டிகிரி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து இவர் ராட்சசன் கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சாஜி சலீம் இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் மீண்டும் சாஜி சலீமுடன் இரண்டாவது முறையாக இணைந்து ‘லாந்தர்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதுவும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாகும். யாரும் இதுவரை சொல்லாத சஸ்பென்ஸ் இந்த படத்தில் இருக்கும் என்று இந்த படத்தின் இயக்குனர் சாஜி சலீம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விதார்த் அறிமுக இயக்குனர் சகோ கணேசன் இயக்கம் புதிய ஹைப்பர்லிங்க் கிரைம் திரில்லர் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் விதார்த்துடன் இணைந்து சந்தோஷ் பிரதாப், கலையரசன், அதுல்யா சந்திரா, திரிகன், தேஜா அஸ்வினி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை ட்ரெண்டிங் என்டர்டைன்மென்ட் நிறுவனம் மற்றும் ஒயிட் ஹாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையிலும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ