டோவினோ தாமஸ் நடிக்கும் நடிகர் திலகம் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான டோவினோ தாமஸ் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 2018 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார். கேரளாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு பெய்த கன மழையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து இவர் டிரைவிங் லைசென்ஸ் படத்தின் இயக்குனரான லால் ஜெ ஆர் இயக்கத்தில் நடிகர் திலகம் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.இவருடன் பாவனா, சௌபின் சாகிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். மைத்ரி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை (ஜூலை 11) தொடங்கும் என செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டோவினோ தாமஸ், அகில் பால் அனாஸ்கான் என்ற இரட்டையர்கள் இயக்கும் ஐடெண்டிட்டி திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.