Homeசெய்திகள்சினிமாபசுபதி நடிப்பில் வெளியான தண்டட்டி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்!

பசுபதி நடிப்பில் வெளியான தண்டட்டி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்!

-

- Advertisement -

தண்டட்டி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தண்டட்டி.
இப்படத்தை இயக்குனர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. படத்தில் பசுபதி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரோகிணி வயதான மூதாட்டியாக நடித்துள்ளார். அம்மு அபிராமி சிறு வயது ரோகினியாக நடித்துள்ளார்.

we-r-hiring

இந்த படம் கிராமத்தின் மண்வளம் மாறாத வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த ஜூன் 23ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ