spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஒசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ. 5 லட்சம் பறிமுதல்

ஒசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ. 5 லட்சம் பறிமுதல்

-

- Advertisement -

ஒசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ. 5 லட்சம் பறிமுதல்

ஒசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ரெய்டு மேற்க்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், கணக்கில் வராத கட்டுக்கட்டான பணத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ரெய்டு

தமிழகத்தில் பத்திரப்பதிவு துறை லாபம் ஈட்டும் துறையாக இருந்து வருகிறது. குறிப்பாக ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தினந்தோறும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நிலம் வாங்கியும்,விற்றும் வருவதால் ரியல் எஸ்டெட் பணிகள் கொடி பட்டி பறக்கிறது. தமிழகத்தின் மாநில எல்லையாகவும், 2 மிகப்பெரிய தொழிற்பேட்டைகளான சிப்காட் அமைந்த நகரமாக ஒசூர் மாநகராட்சி விளங்குகிறது.

we-r-hiring

தினந்தோறும் தொழிற் வளர்ச்சியில் புதிய உச்சத்தையும், வளர்ந்து நகரங்களில் ஆசியாவிலேயே 4வது இடத்திலும் உள்ள ஒசூரில் தினந்தோறும் நிலத்தின் மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து தினந்தோறும் ஒசூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் தடையின்றி பத்திர பதிவு நடைப்பெற்று வருகிறது.

ரெய்டு

ஒசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்று பல்வேறு பணிகள் நடைப்பெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்ட இலஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வடிவேல் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர், நேற்று மாலை திடீர் சோதனை மேற்க்கொண்டதில் கணக்கில் வராத ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பொறுப்பு சப் ரிஜிஸ்டர் சகிலா பேகம் மற்றும் தரகர் மருது இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ