
மணிப்பூர் மாநிலத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 363 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர்…..வெறித்தனமான டீசர் வெளியானது!
நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார் ஷா, மணிப்பூருக்கு கடந்த ஆண்டுகளில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்தியன் புரூஸ்லி தனுஷின் பிறந்தநாள் ஸ்பெஷல்!
இதற்கு மத்திய வட கிழக்கு பகுதி மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாகப் பதில் கொடுத்தார். அதில், மணிப்பூர் மாநிலத்திற்கு 2020- 21 ஆம் ஆண்டில் 114 கோடியே 99 லட்சம் ரூபாயும், 2021- 2022 ஆம் ஆண்டில் 145 கோடியே 24 லட்சம் ரூபாயும், 2022- 2023 ஆம் ஆண்டில் 65 கோடியே 18 லட்சம் ரூபாயும் என மொத்தம் 363 கோடியே 14 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.