Homeசெய்திகள்தமிழ்நாடுமெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

-

- Advertisement -

 

தொழில்நுட்பக் கோளாறால் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

புது மாப்பிள்ளை கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சின்னமலையில் இருந்து ஆலந்தூர் வரை ஒற்றை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். விம்கோ நகரில் இருந்து ப்ளூ லைனில் உள்ள சின்னமலை வரை சாதாரண சேவைகள் இயக்கப்படுகின்றன. ஆலந்தூர் மெட்ரோ முதல் விமான நிலையம் இடையே குறைந்தத் தூர சுற்றுச் சேவையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் கிண்டியில் நிறுத்தப்பட்டுள்ளது. விம்கோ நகரில் இருந்து சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை பயணிகள் வழக்கம்போல் பயணிக்கலாம். விமான நிலையம் செல்லும் பயணிகள், ஆலந்தூர் சென்று வழித்தடம் மாறி விமான நிலையம் சென்றடையலாம்.

விக்ட்ரி வெங்கடேஷ் உடன் கூட்டணி அமைக்கும் ஆர்யா!

தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ