spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிநாயகர் சதுர்த்தி : ரேஷன் கடைகளுக்கு 18ம் தேதி விடுமுறை அறிவிப்பு..

விநாயகர் சதுர்த்தி : ரேஷன் கடைகளுக்கு 18ம் தேதி விடுமுறை அறிவிப்பு..

-

- Advertisement -
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 18ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை  முதலில் வருகிற 17ம் தேதி கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தமிழக அரசு சார்பில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை வருகிற 18ம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வருகிற 18ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி

we-r-hiring

இதுதொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “விநாயகா் சதுா்த்தி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் செப்டம்பா் 18-ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. தமிழக அரசின் பொது விடுமுறைப் பட்டியலில் விநாயகா் சதுா்த்தி பண்டிக்கைக்கான விடுமுறையானது, செப்டம்பா் 17-ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேதியை செப்டம்பா் 18-ஆக மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது, ரேஷன் கடைகளுக்கும் பொருந்தும்படி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ