- Advertisement -
நடிகர் பிரபாஸ் தற்போது சலார் மற்றும் கல்கி 2898AD உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் பிரபாஸ் ஆதிபுருஷ் திரைப்படத்தில் ஸ்ரீராமனாக நடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து சமீபத்தில் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி வரும் கண்ணப்பர் எனும் திரைப்படத்தில் பிரபாஸ் சிவனாக நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியானது. முகேஷ் சிங் இயக்கும் புதிய படத்தில் பிரபாஸுடன் இணைந்து மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதில் நயன்தாராவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபாஸ் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ஏற்கனவே யோகி எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.