spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை...அரசியலுக்கே தகுதி இல்லாதவர் அண்ணாமலை"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

“அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை…அரசியலுக்கே தகுதி இல்லாதவர் அண்ணாமலை”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

-

- Advertisement -

 

"அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை...அரசியலுக்கே தகுதி இல்லாதவர் அண்ணாமலை"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!
Video Crop Image

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், “அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை; இது தான் அ.தி.மு.க. தலைமையின் முடிவு. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை. பா.ஜ.க. உடனான கூட்டணி குறித்து தேர்தலின் போது முடிவுச் செய்வோம்.

we-r-hiring

2 பெண்களால் நான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன்- சீமான்

கூட்டணியில் இல்லாதது பா.ஜ.க.வுக்கு தான் இழப்பு; எங்களுக்கு இழப்பு எதுவும் இல்லை. எங்களை விமர்சிக்கும் பா.ஜ.க.வை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும்? கூட்டணிக் கட்சியை விமர்சித்தால் தேர்தலில் தொண்டர்கள் எப்படி ஒன்றிணைந்து வேலை செய்வார்கள்? எங்களை வைத்து தான் பா.ஜ.க.வுக்கு அடையாளம்; பா.ஜ.க.வால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.

பா.ஜ.க.வின் தேசிய தலைமை சொல்லியே அண்ணாமலை இவ்வாறு பேசுகிறார். பா.ஜ.க.வுக்கு காலே இல்லை; பின் எவ்வாறு அவர்களால் காலூன்ற முடியும்? அண்ணாமலை குறித்து அ.தி.மு.க. தொண்டர்கள் இனி தாறுமாறாக விமர்சிப்போம். அண்ணாமலை தனது பேச்சை நிறுத்தாவிட்டால் ஐடி விங் மூலம் தாறுமாறாக விமர்சனம் செய்வோம். அரசியலுக்கே தகுதி இல்லாதவர் அண்ணாமலை; பா.ஜ.க. தலைவர் பதவிக்கும் தகுதி இல்லாதவர்.

தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டால், நோட்டாவுக்கு கீழ் தான் வாக்குகளைப் பெறுவார்” காட்டமாக விமர்சித்துள்ளார்.

இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் புதிய வீடுகள் -முதலமைச்சர் நெகிழ்ச்சி

பெரியார், அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்டோர் குறித்து அண்ணாமலை விமர்சித்திருந்ததால் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், கூட்டணியை முறிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

MUST READ