காலேஜ் ரோடு படத்தின் சிறப்பு காட்சி சென்னை வடபழனி கமலா திரையரங்கில் திரையிடப்பட்டது. நடிகர் லிங்கேஷ் மற்றும் பைக் ரேசர் டிடிஎப். வாசன் உள்ளிட்டோர் சிறப்பு காட்சியை காண திரையரங்கு வந்தனர்.

டிடிஎப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்வதால் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று சொல்லலாம். அதனால் அவரை காண ரசிகர்கள் கூட்டம் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்புக்காக கமலா திரையரங்கு வளாகத்தில் 20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டிடிஎப் வாசன் வந்திறங்கிய வெள்ளை நிற மகேந்திரா காரில் நம்பர் பிளேட் கூட இல்லை. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதால் போக்குவரத்து துறை போலீசார் டிடிஎப் வாசன் வாசன் வந்த காரை சோதனை செய்தனர்.
காரில் முறையாக நம்பர் பிளேட் இல்லாத காரணத்தினால் போக்குவரத்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். கோடம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், டிடிஎஃப் வாசன் நண்பர் கார் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து முறையாக நம்பர் பிளேட் இல்லாததால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். வாகனத்தின் ஆவணங்களை சமர்ப்பித்து வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அதிகமாக வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல் ,அளவுக்கு அதிகமாக ரசிகர்களை கூட்டியது என டி டி எப் வாசன் மீது புகார்கள் மற்றும் வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது