பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான இறுதி ஆய்வு நாளை நடைபெறுகிறது.
பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான இறுதி ஆய்வு நாளை முதல் நடைபெறுகிறது. அடுத்த மூன்று நாட்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த ஆய்வின் போது, மெட்ரோ ரயிலின் பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளங்களின் தரம், ரயில் பெட்டிகளில் உள்ள வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கட்டுமானத் தரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் பரிசோதிக்கப்பட உள்ளன.

இரண்டு நாட்கள் நடைபெறும் விரிவான ஆய்வுகளுக்குப் பின்னர், மூன்றாவது நாளில் மெட்ரோ ரயிலை மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த ஆய்வுகள் வெற்றிகரமாக முடிந்தால், முதற்கட்டமாக பூவிருந்தவல்லி முதல் வடபழனி வரை ஆளில்லா மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆய்வறிக்கை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்…


