spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் மாடுகளுக்கும் உரிமம் கட்டாயம் - மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் மாடுகளுக்கும் உரிமம் கட்டாயம் – மாநகராட்சி அறிவிப்பு

-

- Advertisement -

சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெற வேண்டும் என மாநாகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் மாடுகளுக்கும் உரிமம் கட்டாயம் - மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் மாடுகளை வளர்த்து வரும் உரிமையாளர்கள், இனி தங்களுடைய மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெறுவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான தீர்மானம், சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்த தீர்மானத்தின் படி, மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெற ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 18ம் தேதிக்குள் அனைத்து மாடுகளுக்கும் மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெற வேண்டும் என மாநகராட்சி தெளிவாக அறிவித்துள்ளது.

மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவதால் ஏற்படும் போக்குவரத்து இடையூறு, சுகாதார சீர்கேடு, விபத்துகள் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. விதிமுறைகளை பின்பற்றாதவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரே, சென்னையில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த விதிமுறை மாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் மொத்தம் 22,857 மாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடுகளை பராமரிக்க வசதியாக, சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே 6 இடங்களில் மாடுகளுக்கான தொழுவங்கள் செயல்பட்டு வருகின்றன.

நகர்ப்புறங்களில் மாடுகளால் ஏற்படும் சிக்கல்களை குறைத்து, ஒழுங்கான நிர்வாகத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த மைக்ரோ சிப் திட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஒரு மணி நேரம் நீடித்த சந்திப்பு! கடைசியில் ராகுல் சொன்ன வார்த்தை! வல்லம் பஷீர் நேர்காணல்!

MUST READ