Homeசெய்திகள்சென்னைபாஜக கூட்டணியை வீழ்த்துவதே எங்களது முதன்மை நோக்கம்: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் அதிரடி!

பாஜக கூட்டணியை வீழ்த்துவதே எங்களது முதன்மை நோக்கம்: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் அதிரடி!

-

- Advertisement -

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து பாஜக தலைமையிலான கூட்டணியைத் தோற்கடிப்பதே தங்களது இலக்கு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.பாஜக கூட்டணியை வீழ்த்துவதே எங்களது முதன்மை நோக்கம்: இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் அதிரடி!திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நீடிப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், மாநில உரிமைகளுக்கும் எதிராகச் செயல்படும் பாஜக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை (அதிமுக-பாஜக கூட்டணி) ஆட்சிக்கட்டிலில் அமர விடக்கூடாது என்பதில் இடதுசாரிகள் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

we-r-hiring

கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், சில இடங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் “பாஜகவை வீழ்த்துவது” என்ற ஒற்றை இலக்கிற்காக விட்டுக் கொடுத்துச் செல்லத் தயார் என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

எதிர் அணியை முறியடிப்போம்

செய்தியாளர்களிடம் பேசிய வீரபாண்டியன், “தற்போது அதிமுக மற்றும் பாஜக ஒன்றிணைந்துள்ள சூழலில், அவர்களின் தேர்தல் வியூகங்களை முறியடிக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை. எங்களுடைய முதன்மை நோக்கம் அந்தப் பிற்போக்குக் கூட்டணியை வீழ்த்துவதுதான். அதற்கான மக்கள் பணிகளை எங்கள் கட்சித் தொண்டர்கள் இப்போதே தொடங்கிவிட்டனர்” என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்தார்.

ஆவடியில் மீண்டும் மாஃபா. பாண்டியராஜன் போட்டியா? – பீதியில் திமுக நிர்வாகிகள்

MUST READ