spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஜிபிஎஸ் கருவியுடன் செல்ல முயன்ற ஜெர்மன் சுற்றுலா பயணியின் பயணம் ரத்து…

ஜிபிஎஸ் கருவியுடன் செல்ல முயன்ற ஜெர்மன் சுற்றுலா பயணியின் பயணம் ரத்து…

-

- Advertisement -

சென்னையில் இருந்து, அந்தமானுக்கு, விமானத்தில் பயணம் செய்ய முயன்ற, ஜெர்மன் நாட்டின் சுற்றுலாப் பயணியின், விமான பயணத்தை, பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனர்.ஜிபிஎஸ் கருவியுடன் செல்ல முயன்ற ஜெர்மன் சுற்றுலா பயணியின் பயணம் ரத்து… சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, அந்தமான் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்கள் உடமைகளையும் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை விமானத்திற்கு அனுப்பி கொண்டு இருந்தனர்.

அப்போது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் ஆண்ட்ரூஸ் (45) என்பவர், இந்த விமானத்தில் அந்தமான் செல்ல வந்திருந்தார். அவருடைய உடமைகளை ஸ்கேன் மூலம் பரிசோதித்த போது, உடமைக்குள் ஜிபிஎஸ் கருவி ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர். இந்திய விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, ஜிபிஎஸ் கருவியை விமான பயணிகள், தங்களுடன் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதிமுறை உள்ளது.

we-r-hiring

இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், ஜெர்மன் நாட்டு பயணி ஆண்ட்ரூஸ்சை நிறுத்தி, விசாரித்தனர். அப்போது அவர் தான், ஒரு மாதத்திற்கு முன்பு ஜெர்மன் நாட்டிலிருந்து, சென்னைக்கு சுற்றுலா பயணியாக வந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்த பின்பு, இப்போது அந்தமான் தீவுக்கு சுற்றுலா பயணியாக செல்வதாகவும், தான் ஜெர்மனிலிருந்து வரும்போதே, இந்த ஜிபிஎஸ் கருவியை எடுத்து வந்ததாகவும், அப்போது விமான நிலையத்தில், இந்த கருவிக்கு தடை ஏதும் விதிக்கவில்லை என்றும் கூறினார். ஆனாலும் பாதுகாப்பு அதிகாரிகள், அவரின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதை அடுத்து ஜெர்மன் சுற்றுலா பயணியான ஆண்ட்ரூஸ், அந்தமான் விமான பயணத்தை, பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்தனர். அதோடு அவரிடம் இருந்த ஜிபிஎஸ் கருவியையும் பறிமுதல் செய்தனர். அதன் பின்பு பாதுகாப்பு அதிகாரிகள், ஜெர்மன் நாட்டு பயணி ஆண்ட்ரூஸையும், மற்றும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஜிபிஎஸ் கருவியையும், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை விமான நிலைய போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் ஒரு மாதம் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் சுற்றுலா பயணியாக சென்றார். எங்கு தங்கியிருந்தார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெர்மன் நாட்டு சுற்றுலாப் பயணி, இந்திய விமான பாதுகாப்பு சட்டத்தை மீறி, விமான பயணத்தின் போது, ஜிபிஎஸ் கருவியை எடுத்துச் சென்றதால், சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணியின் விமான பயணத்தை ரத்து செய்து, ஜிபிஎஸ் கருவியை பறிமுதல் செய்து, சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண்ணையாறு விவகாரம்… ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

MUST READ