spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சென்னை: முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் அதிகாரிகள் அதிரடி சோதனை

சென்னை: முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் அதிகாரிகள் அதிரடி சோதனை

-

- Advertisement -

சென்னையில் முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னையில் முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் அதிகாரிகள் அதிரடி அனுமதியின்றியும் உரிய மருத்துவர்கள் இன்றியும் முடி மாற்று சிகிச்சை நடைபெற்று வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் பேரில் சென்னை அண்ணா நகரில் உள்ள மிஸ்டா் ஹோ் கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மிஸ்டா் ஹோ் கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரகத்தின் இணை இயக்குநா் மீனா சுந்தரிதலைமையில் கிளை அமைப்பதாக கூறி திவ்யா என்பவரிடம் ரூ.30 லட்சம் பெற்றுக் கொண்டு ராஜாராம் என்பவா் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

பணத்தை திருப்பிக் கேட்டபோது மிஸ்டா் ஹோ் கிளினிக் நிா்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்ததாக, திவ்யா போலீசில் புகாா் அளித்துள்ளாா். அந்த புகாரின் போில் முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் பணியாற்றிய மேலாளர்கள், மருத்துவா்கள், ஊழியா்கள்

we-r-hiring

உள்பட 15 பேரை அதிகாரிகள் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்டோருக்கு முடிமாற்று சிகிச்சை அளித்துள்ளனா். முடிமாற்று சிகிச்சைக்கு குறைந்த பட்சம் ரூ.50,000 முதல் ரூ1.5 லட்சம் வரை கட்டணம் வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை கைது!!

 

MUST READ