- Advertisement -
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி
நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரியம் மற்றும் சரவெடி தொடர்பான அனுமதி கோரிய மனுவை ஏற்க முடியாது, தள்ளுபடி செய்கிறோம் என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இரண்டுக்குமான தடை தொடரும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவித்தனர். சரவெடிக்கான தடை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பட்டாசுகளை வெடிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பட்டாசு வெடிப்பதற்கான கால அவகாசத்தையும் நீடிக்கக்கோரிய மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதேபோல் டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.