லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் கிடைத்துள்ளது.
விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் உருவாகியுள்ள இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசை அமைத்துள்ளார். இதில் விஜயுடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, கௌதம் மேனன், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
கடந்த சில தினங்களாக படத்தின் ஹிந்தி தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட போஸ்டர்கள் வெளியாகி பட த்தின் மீதான்ப்பை எகிற செய்துள்ளது. வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவதற்கு தயாராகி வருகிறது. மேலும் சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30இல் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி, சென்னை, நேரு அரங்கத்தில் நடைபெற இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில நாட்களே இருப்பதால் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
