Homeசெய்திகள்சினிமாவிரைவில் தொடங்குகிறதா விக்ரமின் மகாவீர் கர்ணா?.... வெளியான அறிவிப்பு!

விரைவில் தொடங்குகிறதா விக்ரமின் மகாவீர் கர்ணா?…. வெளியான அறிவிப்பு!

-

- Advertisement -

துருவ நட்சத்திரம் மற்றும் தங்கலான் திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் மகாவீர் கர்ணா திரைப்படம் உருவாக இருக்கிறது.

விக்ரம் நடிப்பில் பிரம்மாண்ட அனிமேஷன் படமாக 3Dயில் மகாவீர் கர்ணா திரைப்படம் உருவாக இருப்பதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி படத்தலைப்பை அறிவித்து ஸ்பெஷல் டீசர் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். பாகுபலி படங்களுக்குப் பிறகு வரலாற்று திரைப்படங்கள் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிப்பதில் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் மகாபாரதத்தின் ஒரு கதையான கர்ணனின் கதையை மையமாக வைத்து மகாவீர் கர்ணா திரைப்படத்தை ஆர் எஸ் விமல் இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது எனவும் அந்த வீடியோவில் அறிவித்திருந்தனர். ஆனால் அதன் பின்னர் இப்படம் பற்றிய எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. படம் உருவாகிறதா இல்லை எந்த நிலையில் இருக்கிறது என்று கூட எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில்தான் படத்தின் இயக்குனர் சமூக வலைதளங்களில்டீசர் ஒன்றை வெளியிட்டு சூரிய புத்திர கர்ணா விரைவில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் ரசிகர்கள் ஆர்வமாக இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

MUST READ