spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகவின், நெல்சன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்.... கதாநாயகி யார் தெரியுமா?

கவின், நெல்சன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்…. கதாநாயகி யார் தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் கவின் , டாடா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது பல படங்களில் பிஸியாக நடிக்க வருகிறார். அந்த வகையில் ஸ்டார் உள்ளிட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் சமீபத்தில் நெல்சன் திலிப் குமாருடன் கவின் கூட்டணி அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

நெல்சன் திலிப் குமாரும் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.

we-r-hiring

கவின் நடிப்பில் நெல்சன் தயாரிக்க உள்ள புதிய படத்தை நெல்சன் இடம் இணை இயக்குனராக பணிபுரிந்த சிவபாலன் இயக்க இருக்கிறார். இதன் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதில் இசையமைப்பாளராக அனிருத் பணியாற்ற உள்ளார். இதன் கூடுதல் தகவலாக இதில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. எனினும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை பிரியங்கா மோகன் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிறகு தளபதி 68 இல் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ