லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. செவன்த் இன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைத்துள்ளார். விஜயுடன் இணைந்து இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், கௌதம் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லியோ படத்தின் நான் ரெடி எனும் பாடல் சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து அர்ஜுன், சஞ்சய் தத் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
Pala Rajakala paathachu da.. Ivan kaththi romba kooru achu da 🔥#Badass unleashed-u ma 💥
💣 https://t.co/nIUqD3hj1q#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishbliss @VishnuEdavan1… pic.twitter.com/7gwdzcdlPZ
— Seven Screen Studio (@7screenstudio) September 28, 2023

அதைத்தொடர்ந்து லியோ இசை வெளியீட்டு விழா வருகின்ற செப்டம்பர் 30 நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்த படக்குழுவினர் அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பேடாஸ் மா எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த பாடலை விஷ்ணு எடாவன் எழுதியுள்ள நிலையில் அனிருத் பாடியுள்ளார்.


