Homeசெய்திகள்சினிமா'தளபதி 68' படத்தின் பூஜை எப்போது?.... வெளியான முக்கிய தகவல்!

‘தளபதி 68’ படத்தின் பூஜை எப்போது?…. வெளியான முக்கிய தகவல்!

-

- Advertisement -

விஜய் தனது 67வது படமான லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கம் இருக்கும் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜா இசை இடம் உருவாக உள்ளது. இது சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.

மேலும் இந்த படத்தின் மற்ற நடிகர்கள் குறித்து எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருந்த போதிலும் பல வகையான அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தளபதி 68 படத்தின் பூஜை வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. பூஜையை தொடர்ந்து பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் கூடுதல் தகவலாக இந்தப் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் நடன இயக்குனராக இணைய இருக்கிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ