spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"நதிகளை இணைப்பதே தீர்வைத் தரும்"- ஆளுநரைச் சந்தித்த பின் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

“நதிகளை இணைப்பதே தீர்வைத் தரும்”- ஆளுநரைச் சந்தித்த பின் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

-

- Advertisement -

 

"நதிகளை இணைப்பதே தீர்வைத் தரும்"- ஆளுநரைச் சந்தித்த பின் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
File Photo

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தே.மு.தி.க.வின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்துப் பேசினார். அத்துடன், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் ஆளுநரிடம் வழங்கினார்.

we-r-hiring

பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்ததால் பறிபோன உயிர்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “காவிரி பிரச்சனையில் தீர்வுக் காண நதிகள் இணைப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக விவசாயிகளின் உரிமையை மீட்டுத்தர ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நீரைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளோம்.

தீவிரமடையும் ஆசிரியர்கள் போராட்டம்- 60 பேர் சுருண்டு விழுந்ததால் பரபரப்பு

என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை வேண்டும். காவிரி விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவை செய்வது சரியல்ல. என்.எல்.சி.யால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

MUST READ