spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரயிலில் பயணித்த பெண் தவறி விழுந்து பலி

ரயிலில் பயணித்த பெண் தவறி விழுந்து பலி

-

- Advertisement -

ரயிலில் பயணித்த பெண் தவறி விழுந்து பலி

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு அருகே ரயிலில் பயணித்த பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை இறந்த சோகத்தில் மகள் தூக்கிட்டு தற்கொலை

வெள்ளோடு அருகே பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் ஏதோ ஒரு ரயில் வண்டியில் இன்று (unreserved) முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு எடுத்து பயணம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கும் அம்பாத்துறை ரயில் நிலையத்திற்கும் இடையே வெள்ளோடு என்ற இடத்தில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

we-r-hiring

இறந்தவர் யார் என்று அடையாளம் தெரியாததால் இறந்தவரின் பிரேதத்தை கொடைரோடு இருப்பு பாதை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் அவர்கள் கைப்பற்றி வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் உடலை அடையாளம் காண்பதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாவக்கிடையில் வைக்கப்பட்டுள்ளது

 

MUST READ