spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் வெளியானது 'லியோ'...ரசிகர்கள் கொண்டாட்டம்!

தமிழகத்தில் வெளியானது ‘லியோ’…ரசிகர்கள் கொண்டாட்டம்!

-

- Advertisement -

 

தமிழகத்தில் வெளியானது 'லியோ'...ரசிகர்கள் கொண்டாட்டம்!
Video Crop Image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் தமிழகத்தில் வெளியானது. அதிகாலை 04.00 மணி மற்றும் 07.00 மணி காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காலை 09.00 மணிக்கு வெளியானது ‘லியோ’.

we-r-hiring

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

தமிழகத்தில் ‘லியோ’ திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, தமிழகம் முழுவதும் சுமார் 900 திரையரங்குகளில் லியோ படத்தின் முதல் காட்சி வெளியானது.

தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் ‘லியோ’ திரைப்படம் வெளியானது. அதேபோல், கன்னியாகுமரி மாவட்டம், கேரள எல்லை பகுதி மற்றும் கேரளாவில் ‘லியோ’ திரைப்படத்தின் அதிகாலை 04.00 மணி காட்சி திரையிடப்பட்டது. தமிழக எல்லையில் 2 திரையரங்குகள், கேரளாவில் 655 திரையரங்குகளில் அதிகாலை 04.00 மணி காட்சி திரையிடப்பட்டது.

“ஆடியோ லாஞ்ச் ரத்து ஏன்?, படத்தில் ஆபாச வசனம் இடம் பெறாது”- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி!

ஆந்திரா மாநிலம், சித்தூர் மற்றும் திருப்பதி ஆகிய மாவட்டங்களில் ‘லியோ’ திரைப்படத்தின் அதிகாலை 05.00 மணி காட்சி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ