- Advertisement -
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிக்ஷின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ படத்தை தயாரித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்கள் மட்டுமன்றி படத்தின் இசை அமைப்பாளர் அனிருத், இயக்குநர் லோகேஷ், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் படத்தை பார்க்க சென்னை வெற்றி திரையரங்கிற்கு சென்று படம் பார்த்தனர். முதல் நாளில் மட்டும் 120 கோடி ரூபாய்க்கு மேல் லியோ வசூல் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


