spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கி.வேணு காலமானார்!

தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கி.வேணு காலமானார்!

-

- Advertisement -

 

தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கி.வேணு காலமானார்!
File Photo

கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கி.வேணு உடல்நலக்குறைவுக் காரணமாக இன்று (அக்.21) காலமானார். அவருக்கு வயது 71.

we-r-hiring

சந்திரபாபு நாயுடுவை மீண்டும் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை!

கடந்த 1989 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் கும்மிடிப்பூண்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக கி.வேணு பதவி வகித்தார். மூன்று முறை திருவள்ளூர் மாவட்டச் செயலாளராக இருந்த இவர், தி.மு.க.வின் கழக உயர்நிலைச் செயல் திட்டக்குலு உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார்.

மிசாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சிறையில் இருந்த இவர், கருப்புக்கொடி போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் சிறைச் சென்றார். கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில், இவருக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.

கடந்த ஒருமாதமாக உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கி.வேணுவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக, அவரது சொந்த ஊரான பன்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

‘ககன்யான் சோதனை வெற்றி’- இஸ்ரோ அறிவிப்பு!

அவரது உடலுக்கு தி.மு.க.வின் பொருளாளரும், கட்சியின் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.

MUST READ