spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு"- ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவர் ஷர்மிளா அறிவிப்பு!

“காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு”- ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவர் ஷர்மிளா அறிவிப்பு!

-

- Advertisement -

 

"காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு"- ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவர் ஷர்மிளா அறிவிப்பு!
Video Crop Image

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி அறிவித்துள்ளது.

we-r-hiring

ஆவடியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்து குறித்து விழிப்புணர்வு

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா, தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சியை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், வரும் தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சிப் போட்டியிடாது என்றும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதாகவும், ஒய்.எஸ்.ஷர்மிளா தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக, இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக மருத்துவ மாணவரின் மரணம் – நீதி வழங்க ராமதாஸ் வேண்டுகோள்!

முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும், தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ