
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான விஜயசாந்தி, பா.ஜ.க.வில் இருந்து விலகி உள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை 2ஆவது அரையிறுதிப் போட்டி- தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்!
தெலங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வில் இருந்து சில முக்கிய தலைவர்கள் விலகி வருகின்றன. அந்த வகையில், நடிகை விஜயசாந்தி தனது பதவி விலகல் கடிதத்தை மாநில பா.ஜ.க. தலைவரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் அதிருப்தியில் அவர் கட்சியில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் விஜயசாந்தியிடம் தொலைபேசி வாயிலாக கட்சியில் இணைய அழைப்பு விடுத்துள்ளதாகவும், விரைவில் அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
உலகக்கோப்பைப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்த முகமது ஷமி!
தெலங்கானா மாநிலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜகோபால் ரெட்டி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விவேக் வெங்கடசாமி ஆகியோர் பா.ஜ.க.வில் இருந்து அண்மையில் விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
119 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா மாநிலத்திற்கு வரும் நவம்பர் 30- ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.


